சினிமா

விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

அறிமுக இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி அடுத்துள்ள தர்பார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.

ALSO READ  இறுதிக்கட்ட படப்பிடிப்பு; ஜெய்ப்பூர் செல்லும் மணிரத்னம் !

அரசியல் நையாண்டியாக தயாராகி வரும் இப்படத்திற்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்கள் எழுதி வருகிறார். 96 பட இயக்குனர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய்சேதுபதி ஒரு டேபிள் முன் அமைதியாக உட்கார்ந்திருக்க அவருடைய பிம்பம் சிரித்தபடி இருக்கும் வகையில் உள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 

ALSO READ  "தளபதி கெட்டப்பில் தோன்றும் ஹரிஷ் கல்யாண்", இணையத்தில் வைரலாகும் ஸ்டார் பட போஸ்டர்..!

 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமேசான் நிறுவனத்தின் CEO பதவியிலிருந்து விலகும் ஜெஃப் பெசோஸ்..!

News Editor

திரிஷாவின் முதல் சம்பளம் இதுதானா?????

naveen santhakumar

போர்வீரன் கதாபாத்திரத்தில் அர்ஜுன்

Admin