இந்தியா

5 மாத குழந்தையின் உயிர்காக்க 6 கோடி ரூபாய் வரி ரத்து; பிரதமர் மோடி அதிரடி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை – அந்தேரி பகுதியை சேர்ந்த தீரா காமத் என்ற ஐந்து வயது குழந்தைக்கு மரபணு ரீதியிலான நோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தது. இதனையடுத்து அந்தக் குழந்தைக்கு சிகிச்சையளிக்க, அமெரிக்காவிலிருந்து 16 கோடி மதிப்புள்ள மருந்தை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கான பணத்தை அக்குழந்தையின் பெற்றோர் க்ரவுட் ஃபண்டிங் (crowd funding) மூலமாக திரட்டினார்.

ALSO READ  இந்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த இஸ்லாமிய பெற்றோர்

மேலும் குழந்தையின் உடல்நிலை குறித்து பெற்றோர், பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தனர். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துக்கு 6 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், குழந்தையின் பெற்றோர் மேற்கொண்டு பணம் செலவழிக்க முடியாமல் இருப்பதால், ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு எழுதினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, உயிர்காக்கும் மருந்துக்கு வரி தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதனையடுத்து பட்னாவிஸ் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்நாடக மாநிலத்தில்  வெடி விபத்து; பிரதமர் மோடி வேதனை..!

News Editor

புதுச்சேரி அமைச்சரின் வியக்கத்தக்க செயல்….பாராட்டுக்கள் குவிகின்றன….இப்படியும் ஒருவரா????

naveen santhakumar

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்- அறிவித்தார் மோடி

naveen santhakumar