இந்தியா

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிற்கு டாடா சொல்கிறது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் குஜராத் மாநிலத்திலும், சென்னை மறைமலைநகர் பகுதியிலும் ஃபோர்டின் ஆலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேற உள்ளதாக ஃபோர்டு நிறுவனத்தின் அமெரிக்க தலைமையகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஃபோர்டின் ஆலையில் பணி புரியும் 4 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சானந்த் நகரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி 2021 ஆம் ஆண்டு இறுதியிலும் சென்னையிலுள்ள தொழிற்சாலையில் 2022ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியிலும் பணிகள் நிறுத்தப்படும் என்றும் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.

Having entered India in the mid-1990s Ford has struggled to make a mark in the Indian automotive space despite more than two decades of existence. 
 (In pic: Ford Ecosport)

தற்போது இந்தியாவில் வாகனங்களை வாங்கியவர்களுக்கு தொடர்ந்து சேவைகளை ஃபோர்டு நிறுவனம் தனது டீலர்கள் மூலம் வழங்கி வரும் என தெரிவித்துள்ளனர்.

ALSO READ  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிப்பு

வேலையிழக்கும் 4000 பணியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் பிற நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு ஃபோர்டு நிறுவனம் 1.7 பில்லியன் டாலர்கள் ஒதுக்கி நிறுவனத்தின் தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ford Motor to stop production, shut down both plants in India

இந்நிலையில் தமிழ் நாட்டில் உள்ள மறைமலைநகரில் ஃபோர்டுக்கு மாற்றாக வேறு கார் நிறுவனத்தின் ஆலை செயல்பட அனுமதிக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா சிகிச்சைக்கு கங்கை நீரை பரிந்துரைத்த மத்திய அரசு.. NO சொன்ன ICMR…

naveen santhakumar

ஸ்கிராப் பொருட்களில் தயாரிக்கப்பட்ட கலாம் சிலை

News Editor

பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் செத்துப் போய் விடுங்கள்-
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

News Editor