இந்தியா

தடுத்து நிறுத்திய போலீஸ்…. தந்தையை தூக்கிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற நபர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குளத்துபுழா:-

கேரள மாநிலம் புனலூர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு  உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை மகன் சுமந்து சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முறையான அனுமதி பெற்ற வாகனங்களை மட்டும் காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர் . இந்நிலையில் கொல்லம் மாவட்டம் புனலூர் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை ஆட்டோவில் கொண்டு செல்ல முயன்ற போது முறையான அனுமதி இல்லாததால் காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். 

ALSO READ  கொரோனா வைரஸ் பரவல் வீரியம் குறைந்தது- எய்ம்ஸ் இயக்குனர்… 

இதனை தொடர்ந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை மகன் தோளில் சுமந்தவாறு மருத்துவமனை சென்றார். அவருடன் வயதான தாயாரும் நடந்தே சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கேரளா மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  நாடு தழுவிய அளவில் E-Pass மத்திய அரசு..

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Parimatch On Line Casino Polska Bonus +100% Za Pierwszy Depozyt

Shobika

“நவ் பாரத் உதயான்-ல் அமையவிருக்கும் கட்டிடத்தை வடிவமைக்க யோசனை அளிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 5 லட்சம் :

naveen santhakumar

நடமாடும் தடுப்பூசி பேருந்து சேவை – கொடி அசைத்து தொடங்கி வைத்தார் பினராயி விஜயன்

News Editor