இந்தியா

கொரோனா வைரஸ் பரவல் வீரியம் குறைந்தது- எய்ம்ஸ் இயக்குனர்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:-

உலகின் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் தற்போது இந்தியாவில் குறைந்துள்ளது மேலும், 90% கொரோனா நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகிறது என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துஉள்ளார்.

இது ரந்தீப் குலேரியா அவர் மேலும் கூறியதாவது:-

தீவிர கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் வந்த நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்ததில், நோய் பரவலின் வீரியம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், 80 சதவீதம் பேர், 12 – 13 நகரங்களில் வசிக்கின்றனர்.

இப்பகுதிகளில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தி விட்டால், அடுத்த 2 – 3 வாரங்களில், நோய் உச்சத்தை தொட்டு, பின் சரியத் துவங்கி விடும்.

ALSO READ  ஆமா லஞ்சம் கொடுத்தேன்.. ஒப்புக் கொள்ளும் தமிழக மக்கள்.. அதிர்ச்சி முடிவுகள்..

மேலும், கூறிய குலேரியா இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு, பி.சி.ஜி. எனப்படும், காசநோய் தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளதால், இயற்கையாகவே அதிக நோய் எதிர்ப்பு ஆற்றல் உடையவர்களாக உள்ளனர். இதுவும் கொரோனா பலி குறைவாக உள்ளதற்கு ஒரு காரணம் ஆகும். அவசர சிகிச்சை பிரிவில், நோயாளிகள் குறைவாகவே உள்ளனர். அதோடு வென்டிலேட்டர் கருவியின் உதவியோடு சிகிக்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.

ALSO READ  கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த புதுவை முதல்வர்!

ஹைட்ராக்ஸிக்கிலோராக்வின் மற்றும் ரெம்டிசிவிர் மருந்துகள் பற்றி கூறும் போது:-

‘ரெம்டிசிவிர்’ மருந்து, நோய் குணமாகும் காலத்தை குறைக்குமே தவிர, தீவிர நோய் உள்ளவர்களின் மரணத்தை தடுக்க துணை புரியாது. அதுபோல, லேசான அறிகுறி உள்ளோருக்கு, ‘ஹைட்ராக்சிகுளோரோக்வின்’ மருந்து ஓரளவு பலனளிக்கிறது. இந்தியாவில், கொரோனா இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை. அதேவேளையில், ‘கொரோனா ஹாட்ஸ்பாட்’ பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீடுகளில் சீன மீட்டர்களை பொருத்த தடை…

naveen santhakumar

இந்தியாவில் மீண்டும் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor

ராமாயணம் படிக்கும் குரங்கு – வைரல் வீடியோ!

naveen santhakumar