இந்தியா

ஜூலை 19 இல் துவங்குகிறது பாராளுமன்ற மழை கால கூட்டத் தொடர் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாராளுமன்ற மழை கால கூட்டத் தொடர் 19 நாள் அமர்வு கடுமையான கோவிட் -19 நெறிமுறைகளுடன் நடைபெறும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்தார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் – பாராளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் சமூக இடைவெளிக்கான நெறிமுறைகளைப் பின்பற்றியே இருக்கும் என்று தெரிவித்தார்.

Parliament of India

பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் . தற்போது 411 மக்களவை உறுப்பினர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அவர்களில் 312 பேருக்கு இரண்டு டோஸ் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள உறுப்பினர்களுக்கு இன்னும் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் தடுப்பூசி போடப்படவில்லை என்று சபாநாயகர் பிர்லா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.


Share
ALSO READ  தேசிய கொடியில் 'மேட் இன் சைனா' வாக்கிய சர்ச்சை?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிப்பு -ஐ.சி.எம்.ஆர்.

News Editor

இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு !

News Editor

5 லட்சம் இலவச விசா – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

naveen santhakumar