தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
உத்தரப்பிரதேசம்:
உத்தரப் பிரதேசத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை மீட்க சிறப்பு ரயில் ஒன்று மத்தியப் பிரதேசம் வரை சுமார் 260கிலோ மீட்டர் தூரத்திற்கு நிற்காமல் இயக்கப்பட்டது.

ஸாத்புராவைச் சேர்ந்த ஆஷா ரெய்க்வாரின் 3 வயது குழந்தை காவ்யா கடந்த 25-ம் தேதி அன்று காலையில் லலித்பூர் ரயில் நிலையம் அருகே திடீரென மாயமானது. CCTVயை ஆராய்ந்த ரயில்வே போலீசார் அங்கிருந்து புறப்பட்ட ரப்திசாகர் சிறப்பு ரயிலில் ஒரு இளைஞர் குழந்தையுடன் ஏறுவது தெரிந்தது.

இதனை அடுத்து போபாலுக்கு செல்லும் அந்த ரயிலை வழியில் எங்கும் நிற்காமல் செல்லும்படி ரயில் ஓட்டுனருக்கு வயர்லெஸ் மூலம் உத்தரவிடப்பட்டது. அதன்படி போபால் சென்ற அந்த ரயிலை சுற்றி வளைத்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் கடத்தல்காரனிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.