தமிழகம்

அரியலூர் வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ஜவஹர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக, தொடர்ந்து மூன்று முறை வென்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து மக்களின் மனதை வென்றவராக திகழ்ந்தவர் எம்ஜிஆர்.

அவர், மக்கள் திலகமாக உயர்வு பெற்றதற்கும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தற்கும், அவரது புரட்சிப் பாடல்கள் பெரும்பங்கு ஆற்றின என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில், எம்ஜிஆரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற பாடல்களை எழுதிய மருகாசியின் பேரன் பேராசிரியர் ஜவஹர்தான் தற்போது அரியலூர் தொகுதியின் ஐஜேகே வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

நீலமலைத்திருடன் படத்துக்காக “சத்தியமே லட்சியமாய் நில்லடா. தலைநிமிர்ந்து உனைநினைந்து செல்லடா” என்று பாடல் எழுதினார் மருதகாசி. அந்த வரிகளுக்கு ஏற்ப, தமிழகத்து இஞைர்களுக்கு தரமான கல்வி அளித்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்து, தூய்மையான அரசியலில் அடியெடுத்து வைத்தது இந்திய ஜனநாயகக் கட்சி.

அக்கட்சி இன்றைக்குத் தனது கல்லூரியில் பேராசியராக பணியாற்றும் ஜவகரை அரியலூர் தொகுதி வேட்பாளராக அறிவித்து, மக்கள் பணிக்காக களமிறக்கியுள்ளது. இதன் மூலம், சிறந்த கல்வியாளர்கள் அரசியலுக்கு வரவேண்டும் எனக் கூறுவதை நிறுபித்துக் காட்டியிருக்கிறார் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து.

அரியலூர் மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்த ஜவகர் எம்.பி.ஏ முடித்து பி.ஹெச்.டி முடித்து எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பேராசியராக மாணவர்களுக்கு கல்வி போதித்து வருகிறார். ஐ.ஜே.கே மாநில இலக்கிய அணிச் செயலாளராகவும், பாரி நற்பணி மன்ற மாநில இளைஞரணிச் செயலாளராகவும் ஏற்கெனவே பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டவர்தான் பேராசிரியர் ஜவஹர்.

அரசு தலைமைக்கொறடாவாக கடந்த ஜந்து ஆண்டுகளில் அரியலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக பணியாற்றிய தாமரை.ராஜேந்திரன், அரியலூருக்கு என அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தது மட்டுமே சாதனை எனவும், இன்றுவரை தங்களுக்கு தீர்க்கப்படாத குறைகள் ஏராளம் உள்ளன எனவும் அரியலூர் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகள்

  1. அரியலூரில் உள்ள 9 சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க, சிமெண்ட் ஆலைக்கு செல்லும் லாரிகளுக்கெனத் தனிப்பாதை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை.
  2. அரியலூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். நகராட்சியாக இருந்தும், அரியலூர் நகரில் அடிப்படை வசதிகளான குப்பை வாருதல், மின் விளக்குகள், குடிநீர், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.
  3. 1959-ல் தொடங்கப்பட்ட புள்ளம்பாடி வாய்க்காலை தூர்வாரி, மதகுகள் சீர்படுத்தி செப்பனிடப்பட வேண்டும். வழியில் உள்ள குளங்கள், ஏரிகளை து£ர்வாருவது மூலம், கொள்ளிடத்தில் வீனாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க முடியும். டெல்டா பகுதிகளான திருமானூர், தா.பழூர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்ற விவசாயிகளின் கோரிக்கை இதுவரை தீர்க்கப்படவில்லை.
  4. பச்சைமலையில் உருவாகி சிறுவாச்சுர் வழியாக வரும் மருதையாற்றுத் தண்ணீர், கொள்ளிடத்தில் கலந்து கடலுக்குச் சென்று வீணாகிறது. இதன் குறுக்கே தடுப்பணை கட்டி, பறவைகள் சரணாலயமான கரைவெட்டி ஏரிக்குத் தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும் என்பது இன்றுவரை தீர்க்கப்படவில்லை
  5. திருமானூர் டெல்டா பாசன விவசாயிகளின் நலன் காக்க நவீன அரிசி ஆலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
  6. திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, ஒவ்வொரு நாளும் லட்சகணக்கான மில்லியன் கனஅடி நீர் குடிநீருக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதளத்துக்குச் சென்றுவிடுகிறது. எனவே, இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, மணல் எடுக்க தடைவிதிக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி தடுப்பனைகள் கட்டி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.
ALSO READ  6வது முறையாக மானியமில்லாத சிலிண்டர் விலை உயர்வு

இந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களிடம் எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளன.

  1. அரியலூரில் மகளிருக்கு தனி கலைக்கல்லூரி அமைக்கவேண்டும்.
  2. அரசு சிமெண்ட் ஆலைக்கென நிலம் வழங்கியவர்களுக்கு வேலையும், தனியார் தொழிற்சாலைகளில் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலையும் வழங்கப்பட வேண்டும்.
  3. தமிழக அரசு அறிவித்துள்ள, கொள்ளிடம் ஆற்றின் குருக்கே தூத்தூர் மண்ணியார், வாழ்க்கை கிராமங்களுக்கு இடையே கதவனையுடன்கூடிய மேம்பாலம் கட்ட நிதி ஒதிக்கீடு செய்து பணிகளைத் தொடங்க வேண்டும்.
  4. பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற அரியலூர் தொகுதியில் உற்பத்தி செய்யப்படும் பாலை சேமித்து வைக்க பால் குளிருட்டும் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
  5. கொள்ளிடக்கரையை பலப்படுத்தி, வாகனங்கள் செல்லும் அளவுக்கு அகலப்படுத்த வேண்டும்.
  6. திருமானூர், தா.பழூர் பகுதிகள் டெல்டா பாசனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டும், அதற்கான சலுகைகளான கூடுதல் மின் இனைப்பு, உர மாணியம், இடுபொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட டெல்டா பகுதிக்கென வழங்கப்படும் சலுகைகள் அரியலூர் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. இந்தக் குறை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.
  7. திருமானுரை தாலுகாவாக அறிவிக்க வேண்டும். திருமானூரில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
  8. கிராமச் சாலைகளை தரம் உயர்த்தி மேம்படுத்த வேண்டும்.
ALSO READ  நெல்லை சாஃப்டர் பள்ளிக்கு நாளை முதல் விடுமுறை… வெளியானது அதிரடி உத்தரவு!

இவ்வளவு எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில், இவை அனைத்தையும் அறிந்த வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் பேராசிரியர் ஜவஹர். 100 நாள் வேலை பார்க்கும் பொதுமக்கள், வயலில் வேலை பார்க்கும் விவசாயிகள், நகரங்களில் தரைக் கடைகளை வைத்து பிழைப்பு நடத்தும் ஏழை எளிய மக்கள் ஆகியோரை நேரில் சந்தித்து, தன்னை வெற்றிபெறச் செய்தால் மக்களின் நீண்ட நாள் குறைகளைத் தீர்த்து, புதுப்புது திட்டங்களை செயல்படுத்துவேன் எனக்கூறி வீதி வீதியாக வாக்குச் சேகரித்து வருகிறார் பேராசிரியர் ஜவஹர்.

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் தூய்மையான அரசியலை தரவேண்டும் எனப் பாடுபட்டு வரும் ஐ.ஜே.கே தலைவர் ரவி பச்சமுத்துவின் கொள்கைகளை செயல்படுத்தும் விதமாக அரியலூரில் போட்டியிடும் ஐ.ஜே.கே வேட்பாளர் ஜவஹருக்கு, அனைத்துத் தரப்பினரும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் ஆண்ட கட்சி, ஆளும் கட்சி என இரண்டு கட்சிகளுக்கும் சரியான போட்டியைத் தந்து, வெல்லப்போவது யார் என்பதில் முன்னனியில் இருக்கிறார் இந்திய ஜனநாயக கட்சியின் வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ஜவஹர்.

#TamilnaduEelection #TNelection2021 #IJK #makkalneedhimaiam #javahar #ariyalur #ariyalurcandidate2021 #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆத்தூரில் காவல் ஆய்வாளர் உள்பட 117 பேருக்கு கொரோனா தொற்று !

News Editor

மூன்றாவது மாரடைப்பு; ஆஞ்சியோ மூலம் சரி செய்து மருத்துவர் !

News Editor

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

News Editor