தமிழகம்

வீடுகளில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் இயங்கி வரும் கொரோனா பெருந்தொற்று கட்டளை மையத்தை பார்வையிட்ட  பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்க்க இந்த கட்டளை மையம் பெரிய அளவில் உதவியாக உள்ளது.

kakan deep singh pedi

சென்னை மாநகராட்சி சார்பில் இதுபோன்ற ஒரு கட்டளை மையம் உருவாக்கி டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தோடு ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அறிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பரிசோதனை எடுத்தால் கொரோனா மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். முதற்கட்டமாக 30 ஆயிரங்கள் தயார் நிலையில் வைத்து வழங்கி வருகிறோம். மேலும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை கட்டாயம் வீடுகளில் தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

கொரோனா பரிசோதனை எடுத்து வீடுகளில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமை படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்த அவர், இதன் மூலம் சென்னையில் கொரோனா பரவல் தொற்று குறையும் என நம்பிக்கை உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார். 


Share
ALSO READ  சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க தடை:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனைவரும் இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்; சென்னை மாநகராட்சி ஆணையர் !

News Editor

தமிழகத்தில் இன்றைக்கும் இவ்வளவு பேருக்கு கொரோனாவா?

naveen santhakumar

அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து:

naveen santhakumar