தமிழகம்

கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்த தமிழக அரசு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் நகரம் முதல் கிராமம் வரை பரவி வரும் இந்த பெருந்தொற்றை கண்டறிய பரிசோதனையை  அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, “தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ 1,200-ல் இருந்து ரூ. 900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  பிரான்ஸ் அதிபர் இமானுவேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அவரது புகைப்படத்தை ஒட்டியதால் பரபரப்பு:

முதல்வரின் காப்பீடுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை கட்டணம் ரூ.800 இருந்து ரூ.550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிக்கான கட்டணம் ரூ800 லிருந்து ரூ550 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குழுவாக பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ 600 ல் இருந்து 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது.” என கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

6 மாவட்ட மக்களே உஷார்… இன்று மழைக்கு வாய்ப்பு!

naveen santhakumar

சிறுமியர் ஆபாசப்படங்களைப் பகிர்ந்தவனை காட்டி கொடுத்த ஃபேஸ்புக் நிறுவனம்….

naveen santhakumar

தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது – தமிழக அரசு… 

naveen santhakumar