தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி – சாலை ஓரத்தில் போடப்பட்ட பயணி உடல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை விமான நிலையத்தில் மரணமடைந்த அசாம் பயணியில் உடல் விமான நிலையத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் கொரோனா பரவும் அபாயம்!

பல்லவரத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் அசாமை சேர்ந்த தீபக் பால். சென்னையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று சென்னையிலிருந்து கவுகாத்திக்கு மதியம் 3:55க்கு கிளம்பும் விமானத்தில் முன் பதிவு செய்துள்ளார்.

விமான நிலையத்தில் மழையில் வீசப்பட்ட வடமாநில தொழிலாளியின் உடல்.. சென்னையில் அதிர்ச்சி..

இதனிடையே விமானம் கிளம்ப தயாராகும் அரை மணி நேரத்திற்கு முன்பாக காத்திருப்போர் அறையில் இருந்த தீபக் பாலுக்கு உடல் வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் பயணி தீபக் சஹர் உடலை ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ALSO READ  காவலர் தூக்குப் போட்டு தற்கொலை - விசாரணையில் பகீர் தகவல் !

அங்கு சிகிச்சை அளித்த பின்னர்உடல் தேறிய தீபக் பால் இன்று காலை அசாமிற்கு விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக விமான துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை வேளையில் மீண்டும் தீபத் பாலுக்கு விமான நிலையத்தில் உடல் உபாதை ஏற்பட்டுள்ளது . மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே தீபக் பால் மரணமடைந்ததார். இதனால் தீபக் பாலின் பூத உடல் விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.

ALSO READ  சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி கேட்ட நபரின் தலை பீர் பாட்டிலால் உடைப்பு
The body of a North Indian worker thrown on the road airport space

ஆனால் எடுத்து வரப்பட்ட உடல் சென்னை உள் நாட்டு விமான முனையத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் போடப்பட்டதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

16-ம் ஆண்டு சுனாமி நினைவுதினம்….பலியானவர்களுக்கு நினைவஞ்சலி…….

naveen santhakumar

நிர்வாண நிலையில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்

Admin

சிலிண்டரின் விலை 15 நாட்களில் 100 ரூபாய் அதிகரிப்பு…!

News Editor