தமிழகம்

அரசு ஊழியர்களுக்கான முன் ஊதிய உயர்வு ரத்து- தமிழக அரசு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழக அரசு ஊழியர்கள் அந்த பதவிக்கு தேவையானதை விட கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால் இரண்டு அல்லது மூன்று முன் ஊதிய உயர்வுகள் (Advance Increments) வழங்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக சிலர் பணியில் சேர்ந்த பிறகு கூட உயர் படிப்புகளைப் படித்து கூடுதல் சம்பளத்தை பெற்று வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு இதுநாள்வரை வழங்கிவந்த முன் ஊதிய உயர்வை ரத்து செய்ய போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

ALSO READ  இனி இவர்களுக்கு வீடு தேடி உணவு வரும்… தமிழக அரசு அதிரடி!

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

இதுநாள்வரையில் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உயர்கல்வி கற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முன் ஊதியம் உயர்வு ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இனி அரசு பணியில் இருப்பவர்கள் உயர்கல்வியை காரணம் காட்டி கூடுதல் சம்பளம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இருந்துள்ளனர்.

ALSO READ  டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு… வருத்தத்தில் குடிமகன்கள்.. ஏன் தெரியுமா???

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சமூக ஆர்வலர்  டிராஃபிக் ராமசாமி  காலமானார்!

News Editor

வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து – மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

naveen santhakumar

கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுபிடிப்பு!

naveen santhakumar