தமிழகம்

முழு ஊரடங்கில் இதற்கு மட்டும் அனுமதி… தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று தீயாய் பரவி வருகிறது. சுனாமி பேரலையைப் போல் முழு வீச்சில் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு ஆகியவற்றை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமணங்களுக்கு செல்ல முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.

ALSO READ  தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க அணைத்து கட்சிகளும் ஆதரவு !

நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு நாளன்று திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கொரோனா பரவலைத் தடுப்பதற்காக, அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கெனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள் திருமண அழைப்பிதழ்களைக் காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

ALSO READ  வாகனங்களில் கட்சி கொடிகள் தலைவர்களின் புகைப்படங்களை ஓட்ட தடை

திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாணவர்களின் சேர்க்கை விபரத்தை சமர்பிக்க கோரி…… பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை…..

naveen santhakumar

தொழிலாளர்களுக்கும் திமுகவிற்குமான உறவை யாராலும் அழித்து விட முடியாது..

Shanthi

கொரோனா நிதியாக 2000 ரூபாய் வழங்கும் பணி துவக்கம் !

News Editor