தமிழகம்

கொரோனவால்  நிரந்தரமாக மூடப்படும் பள்ளி; பெற்றோர்கள் அதிர்ச்சி 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேலம் அழகாபுரம் பகுதியில் இயங்கி வருகிறது விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த பள்ளி தற்போது கொரானா தொற்று காரணமாக ஒரு வருடத்துக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளியின் மூலம் மாணவ மாணவிகளுக்கு அவ்வப்போது ஆன்லைன் வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டு வருகிறது .

இந்த நிலையில் பள்ளியை மூட படுவதாகவும் எனவே பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களின் மாற்று சான்றிதழ்களை நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ளுமாறு பள்ளியின் சார்பில்  பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் குறுஞ் செய்தி அனுப்பப்பட்டது..

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர் பெற்றோர்கள் கேள்விக்கு பதில் சொல்ல யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
 இதனால் பரபரப்பு ஏற்பட்டது

ALSO READ  சீனாவை காக்க போதிதர்மன் வருகிறாரா?- நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்கள்

இது குறித்து அவர்கள் கூறும்போது தற்போது தங்கள் குழந்தைகள் 10 மற்றும் 12,ஆம் வகுப்புகள்  பள்ளியில் படித்து வருவதாகவும் திடீரென பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்த சூழ்நிலையில் மாற்றுச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் சேர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து பள்ளியை நடத்திட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசு தங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர் .

பள்ளி மூடப்பட்டது கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முட்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

ALSO READ  3 மடங்கு மின் கட்டணம் உயர்வு… அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி…!!!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் புதிய புயலுக்கு வாய்ப்பு!

naveen santhakumar

தனது வீட்டிலேயே ஆலை நிறுவி மக்களுக்கு இலவசமாக சானிடைசர் வழங்கும் சமூக ஆர்வலர்…. 

naveen santhakumar

நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு தண்ணீர், மின் இணைப்பு கிடையாது -தமிழக அரசு..!

Admin