தமிழகம்

பள்ளிகள் திறப்பு; பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை- தமிழக அரசு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் நாளை செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் திறக்கப்படவுள்ளன. வகுப்புகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும்.

இதனால், பெற்றோர்கள் தயக்கமின்றி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம். கொரோனா குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. 1 முதல் 8 வரை பள்ளிகள் செயல்படாத நிலையில், அந்த வகுப்பறைகளை பயன்படுத்தி கொள்ளலாம். வகுப்பறையில் முனைக்கு ஒருவர் என ஒரு பெஞ்சில் மொத்தம் 2 மாணவர்களே அமர வைக்கப்பட வேண்டும்.

ALSO READ  குரூப்-1 கலந்தாய்வு வரும் ஜனவரி 6-ஆம் தேதி

முகக்கவசம் அணிந்து வராத மாணவ மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் புதிய முகக்கவசம் அளித்து அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வர் எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயம் இல்லை என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

ALSO READ  தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் விரைவில் வெளியீடு?

பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிடக்கோரி பொதுநலவழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழங்கு விசாரணையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை: காவல்துறை அறிவிப்பு

naveen santhakumar

குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவு ரத்து ??? – டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு..!

naveen santhakumar

பிரேசில் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி !

News Editor