தமிழகம்

மனைவியை அவதூறாக பேசியதால் விஷம் குடித்த கீரை வியாபாரி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

ஆத்தூரில் தனியார்  வங்கியில்  வீட்டு அடமான  கடன்  பெற்ற  தவணை தொகையை  வசூல்  செய்ய  சென்ற  நபர்கள்  கடன் பெற்றவரை தன் மனைவியை அவதூறாக பேசியதால் மனமுடைந்த  நபர்  விஷமருந்தி  தற்கொலை  முயற்சி, ஆபத்தான நிலையில்  அரசு  மருத்துவமனையில்  அனுமதி,  போலீசார்  விசாரணை,

சேலம்  மாவட்டம்  ஆத்தூர்  அருகே  நரசிங்கபுரம்  நகராட்சிக்கு  உட்பட்ட 10 வது  வார்டு  கல்லுடைத்தேன்  மலை  தெற்கு காட்டில்  வசிப்பவர்  கீரை  வியாபாரி குமார் (வயது 42) இவர்  தனக்கு  சொந்தமான  இடத்தில்  வீடு  கட்டுவதற்காக ஆத்தூரில்  உள்ள  பைவ் ஸ்டார்  பைனான்சில்  நான்கு  வருடத்திற்கு  முன்பு நான்கு  லட்சத்து  25 ஆயிரம்  ரூபாய்  கடன்  தொகை  பெற்றுள்ளார். பின்னர்  மாத தவணையாக 12,300 ரூபாய்  வீதம் 30 மாதம் செலுத்தி வந்துள்ளார்.


கொரோனா ஊடங்கு காரணமாக சரிவர வேலை இல்லாத சூழலில்  ஒரு மாதம் தவணை தொகை நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. தவணை  தொகையை  வசூலிக்க குமாரின் வீட்டிற்கு சென்ற பைனான்ஸ் ஊழியர்கள் தவணை தொகையை கட்ட சொல்லி டார்ச்சர் செய்ததோடு கடன் தாரரையும் அவரது மனைவியையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

ALSO READ  நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு !


பின்னர் இரண்டு நாள்  கால அவகாசம்  கேட்டு  வங்கி  மேலாளரிடம்  முறையிட  சென்றுள்ளார், அப்போது பைனான்சில்  பணிபுரியும்  கலெக்ஷன்  நபர்கள்  முகேஷ்  உள்பட இரண்டு பேரும் குமாரை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது, இதனால்  மன  உளைச்சலுக்கு ஆளான  குமார்  பைனான்ஸ் வாசலிலே  தான்  வைத்திருந்த  விஷத்தை  குடித்து தற்கொலைக்கு  முயன்றுள்ளார்,  மயங்கி  விழுந்த  குமாரை  பைனான்ஸ் ஊழியர்கள்  மீட்டு  சிகிச்சைக்காக  ஆத்தூர்  அரசு  மருத்துவமனையில்  சேர்த்து விட்டு குமாரின் குடும்பத்தாரிடம் தெரிவித்து  விட்டு  சென்றுள்ளனர், இதனையடுத்து  குமாரின்  குடும்பத்தார்  ஆத்தூர்  நகர  காவல்  நிலையத்தில் அளித்த  புகாரின்  பேரில் போலீசார்  விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனர்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதுரையில் கொடூரம்…..இளைஞர் தலையை வெட்டி தேவாலயத்தின் முன்பு வைத்த கும்பல்…..

naveen santhakumar

முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு கொரோனா பரிசோதனை ! 

News Editor

தமிழகத்தில் கொரோனா பரவல் கைமீறி சென்று விட்டதா; சுகாதார செயலாளர் விளக்கம் !

News Editor