தமிழகம்

சாதனை ஊக்கத்தொகை… தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு குறிப்பிட்டதொரு தொகையை சாதனை ஊக்கத் தொகையாக அரசு வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2021-ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக “சாதனை ஊக்கத்தொகை” வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்களுக்கு, மொத்தம் 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  150 பேருக்கு மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோவில் திருவிழாக்களை கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும்; கிராமிய கலைஞர்கள் மனு !

News Editor

தமிழகம் முழுவதும் 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள்; 5,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள்

naveen santhakumar

கொரோனா எதிரொலி; கோவில்களில் நடைபெறும் திருமணத்திற்கு புதிய கட்டுப்பாடு !

News Editor