தமிழகம்

தமிழகம் முழுவதும் 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள்; 5,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மழைக்காலத்தில் நோய் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்பட 5,000 மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மழை பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கே சென்று சிகிச்சை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நெல்லையில் டெங்குவுக்கு பிரத்யேக ஆராய்ச்சி மையம்? | Dinamalar Tamil News

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.

இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவாத வகையில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளாக பிளீச்சிங் பவுடர் அடிப்பது, கழிவுநீரை வெளியேற்றுவது, குப்பைகளை அகற்றுவது, சாலைகள் முழுவதும் குளோரின் பவுடர் தெளிப்பது, கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ALSO READ  ரேஷன் அட்டையில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1,000 பணமும் பொங்கல் பரிசும் வினியோகிக்கப்படும்

இந்நிலையில் தொடர்ந்து பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை அளித்த தமிழகத்தில் இன்றைய தினம் 5 ஆயிரம் இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.

மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய சரும பாதிப்புகள், சுவாசப்பிரச்சினைகள், சளி, காய்ச்சல், வைரஸ், பூஞ்சை பாதிப்புகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தேவையான மருந்து, மாத்திரைகள் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் சார்பில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ALSO READ  பள்ளிகள் திறப்பு- உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு …!

இந்த நடமாடும் மருத்துவ சேவையானது இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 1,500 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒமைக்ரான் வைரஸ்; தமிழகத்தில் 12 ஆய்வகங்கள் – தமிழக மருத்துவத்துறை அறிவிப்பு!

naveen santhakumar

அழுகிய நிலையில் சிறுவன் உடல்…… உடன் இருந்த தாய்……அதிர்ச்சியூட்டும் சம்பவம்……

naveen santhakumar

இன்று முதல் 2 நாட்களுக்கு கனமழை வானிலை மையம் எச்சரிக்கை

News Editor