தமிழகம்

தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை கொண்ட ஓமைக்ரான் – தமிழக அரசு ஆலோசனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Image

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் தடுப்பூசி தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதம் 30 முறை உருமாறியுள்ளதால், தடுப்பூசியை எதிர்க்கும் திறன் கொண்டதாக தகவல் கிடைத்திருக்கிறது என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

Third Covid wave of magnitude comparable to first two unlikely to hit  India: AIIMS Director Randeep Guleria - Coronavirus Outbreak News

முதன்முதலில் இங்கிலாந்தில் ஆல்பா எனும் வேற்றுருவமும், அதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா, இந்தியாவில் டெல்டா வேற்றுருவங்களும் கொரோனா வைரஸில் அறியப்பட்டன.

ALSO READ  9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை ஒரே தேதியில் நடத்த அதிமுக வேண்டுகோள்

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இதனால் உலக நாடுகள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஏராளமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவும் தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங், இஸ்ரேல், போதட்ஸ்வானா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எச்சரிக்கை பட்டியல் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமான பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

ALSO READ  அதிர்ச்சி...!!!!!! அதிபர் ஜோ பைடன் பதவியேற்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா.....

இந்நிலையில், கனடாவில் 2 பேருக்கு உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் கிருமி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் நைஜிரியாவில் இருந்து திரும்பிய பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 2 பேருக்கு ஓமைக்ரான் கிருமி தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

இதனிடையே மூன்றாவது அலை குறித்து இப்போதே பேசுவது கூடாது அதற்கான சூழலும் இந்தியாவில் இல்லை. ஆனால், மக்கள் மத்தியில் சில மாதங்களாக கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல் ஒருவிதமான கவனக்குறைவு தெரிகிறது.

இந்த நேரத்தில் கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், கைகளை அடிக்கடி கழுவுதல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றை முறைப்படி செய்வது அவசியம் என்று ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எல்லா கதைக்கும் இரண்டு பக்கங்கள்…. இருவர் சொல்வதும் உண்மை செல்வதும்…ஒன் டே டூ கோ….

naveen santhakumar

தியானம் செய்ய ஒருநாள் அனுமதிக்க முடியுமா : உயர் நீதிமன்றம் கேள்வி 

News Editor

31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- அனுமதிக்கப்பட்டவை; அனுமதிக்கப்படாதவை எவை.?? 

naveen santhakumar