உலகம்

கண்முன்னே பெற்றோரை கொலை செய்த தலிபான்களை பலி வாங்கிய 14 வயது சிறுமி… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காபூல்:-

ஆப்கானிஸ்தானில் தனது கண்முன்னே பெற்றோரை கொலை செய்த தலிபான் பயங்கரவாதிகள் இருவரை துப்பாக்கியால் 14 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொன்று  பழிக்குபழி வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மத்தியில் அமைந்துள்ள கோர் (Ghor) மாகணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அரசுக்கு ஆதரவாக இருந்ததாக அந்த கிராமத் தலைவரை தேடி அவரது வீட்டிற்கு தலிபான் பயங்கரவாதிகள் கடந்த வாரம் சென்றுள்ளனர்.  ஆனால் அவர் வரமறுத்ததால் அவரை வெளியே இழுத்து வந்த பயங்கரவாதிகள் வீட்டின் முன்னர் அவரையும் அவரது மனைவியையும் கண்முடித்தனமாக சுட்டுக்கொண்டுள்ளனர். 

ALSO READ  ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் :

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்களின் 14-16 வயது மகள் ஒமர் குல் (Omar Gul), வீட்டில் இருந்த ஏ.கே 47 துப்பாக்கியை எடுத்து வந்து தனது பெற்றோரை கொன்ற இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளார். சிறுமி நடத்திய தாக்குதலில் மேலும் சில பயங்கரவாதிகளுக்கு கடும் காயம் ஏற்பட்டது. 

சிறுமி நடத்திய தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மேலும் சில தாலிபான்கள் சிறுமியின் வீட்டிற்கு தாக்குதல் நடத்துவதற்கு வந்தனர். அந்த கிராமத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியோடு அந்த சிறுமி அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்  இன்று காவல்துறை தலைவர் ஹபிபூர் ரஹ்மான் மலேக்ஸதா (Habiburahman Malekzada) தெரிவித்தார்.

ALSO READ  காபூலில் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை எச்சரித்த தாலிபான்கள்..!

இதனையடுத்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் தலிபான்களை விரட்டியடித்துள்ளனர்.  பின்னர் அந்த பெண்ணையும், அவரது தம்பி மற்ற உறவினர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு ராணுவத்தினர் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அம்மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் மோகமத் அரெஃப் அபெர் (Mohamed Aref Aber)  தெரிவித்துள்ளார்.

இந்த பெண்மணியின் வீரதீர செயல்கள் குறித்து ஆப்கானிஸ்தானில் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரஷ்ய கிரெம்ளின் மாளிகைக்கும் கொரானா தொற்று பரவியது

News Editor

வீட்டிற்கே விலங்குகளை கூட்டி வரும் கூகுள் க்ரோம்..

naveen santhakumar

நாய்க்கு டாக்டர் பட்டம் – அமெரிக்க பல்கலைக்கழகம் அதிரடி.. 

naveen santhakumar