உலகம்

கொரோனாவிற்கு அடுத்து குரங்கு பி வைரஸ்…! சீனாவில் தொடங்கிய புது இன்னிங்ஸ்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்னும் கொரோனாவே முடியவில்லை, அதற்குள் சீனாவில் ‘குரங்கு பி’ (Monkey B Virus) வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்த செய்தி உலகில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

China reports first Monkey B virus death, Veterinary doctor dies to  infection

கடந்த வாரம் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மாநாட்டில், இந்த வைரஸ் பாதிப்பு முதன் முதலில் மார்ச் மாதம் கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் 53 வயதான கால்நடை மருத்துவர் ஒருவர் , இரண்டு குரங்குகளுக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார். பின்னர் குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த மே 27ல் மரணமடைந்தார்.

ALSO READ  பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று…
China Reports Its First Human Death Due To Monkey B Virus; What We Know So  Far

இவரது எச்சில், ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் ‘குரங்கு பி’ வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கி ஒருவர் முதல் முறையாக பலியானது சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் மகாக்ஸ் வகை குரங்குகளில் 1932ல் கண்டறியப்பட்டது. இது நேரடி கழிவுகள், சுரப்பிகள் மூலம் பரவும். இதில் இறப்பு சதவீதம் 70-80 அதிகம்.

ALSO READ  நாடு கொடுமையான சூழலை சந்தித்துள்ளது : சீன அதிபர் ஜி ஜின்பிங்

குரங்கு, மிருகங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள், ஆய்வு மைய பணியாளர்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும்படி சீனாவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மனிதர்களை ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கும் போது 1-3 வாரங்களில் அறிகுறிகள் தென்படும். பின் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

போலி கையில் தடுப்பூசி – வசமாக சிக்கிய சுகாதார ஊழியர்

naveen santhakumar

குறைவான நாட்களில் 7 கண்டங்களையும் சுற்றி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பெண் :

naveen santhakumar

28 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் மாயம்..!

naveen santhakumar