உலகம்

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா வைரஸ்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

லண்டனைச் சேர்ந்த பிரபல நடிகரான இட்ரிஸ் எல்பா (Idris Elba) கொரொனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் கொரோனாவிற்கான அறிகுறிகள் (Symptoms)  எதுவும் அவருக்கு தெரியவில்லை.

இது குறித்து இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இன்று காலை கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. அதில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஆனால், தற்போது வரை எனக்கு அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 

சமீபத்தில் ஒருவனோ வைரசால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை சந்தித்தேன். அவருக்கு தொற்று இருப்பது கடந்த வெள்ளியன்று தான் தெரிந்தது. எனவே எனக்கும் இருக்குமோ என்ற அச்சத்தில் பரிசோதனை செய்துகொண்டேன்.

ALSO READ  ஒரு வேளை தேர்தலில் பிடன் ஜெயித்தால்!!!!!!!!

இது மிகவும் சீரியஸான விஷயம் மக்கள் சோஷியல் டிஸ்டன்ஸிங் குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. கைகளை கழுவுவது, பிறரிடமிருந்து முடிந்தவரை தள்ளி இருப்பது போன்றவை மட்டுமே இந்த வைரஸில் இருந்து நம்மை காக்கும் என்று கூறியுள்ளார்.

ALSO READ  கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 95 வயது முதியவர் !

முதன் முதலில் அமெரிக்க நடிகர் டாம் ஹாங்ஸ் (Tom Hanks)  தான் தனக்கு வைரஸ் தொற்று இருப்பதை அறிவித்தார். அவர் தனது மனைவியோடு தனிமைபடுத்திக்கொண்டு ஆஸ்திரேலியாவில்  உள்ளார்.

இதேபோல் குவாண்டம் ஆஃப் சொலஸ் என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்த ஓல்கா கரைலென்கோ-விற்கு (Olga Kurylenko) வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனா- இந்தியா ஒற்றுமைக்கு பாலமாக விளங்கும் துவாரகநாத்:

naveen santhakumar

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் 500cc பைக்குகளின் தயாரிப்பு நிறுத்தம்

Admin

வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கியுள்ள கோடீஸ்வரர்! -விற்பனையானது The Haunted House!

News Editor