உலகம்

மெகுல் சோக்சியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது நீதிமன்றம் ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் மீது அமலாக்கத்துறை , சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சியை ( 62) இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, ஆன்டிகுவா குடியுரிமை பெற்ற அவரை நாடு கடத்துவது தொடர்பான சட்ட நகர்வுகளை மேற்கொண்ட வந்த நிலையில், திடீரென மெகுல் சோக்சி காணாமல் போனார்.

ஆன்டிகுவாவை விட்டு வெளியேறிய சோக்சி, சட்டவிரோதமாக டொமினிகாவில் நுழைந்து, அங்கிருந்து கியூபாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

ALSO READ  கொரோனா பாதிப்பில் இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி ரஷ்யா 3ம் இடம்...
Mehul Choksi Denied Bail By Dominica Court In Illegal Entry Case

இந்நிலையில் டொமினிகாவில் உள்ள மெகுல் சோக்கியை அங்கிருந்து நேரடியாக இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன. மெகுல் சோக்சி இந்திய குடிமகன், அவர் மிகப்பெரிய குற்றம் செய்திருப்பதால் எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியா கூறி உள்ளது.

ஆனால் சோக்சியின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது டொமினிகா உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைபெற்ற போது, மெகுல் சோக்சி இந்தியாவில் 14000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் நபர் என்பதால், அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என டொமினிகா அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆனால், சோக்சி இந்திய குடிமகன் அல்ல என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். வெளிநாட்டு குடியுரிமையைப் பெறும் எந்தவொரு நபரும் இந்திய அரசியலமைப்பின்படி, இந்திய குடிமகன் அந்தஸ்தை தானாகவே இழப்பார் என்று கூறினர். எனவே, அவரை நேரடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

ALSO READ  ஊரடங்கு கைதுக்கு கட்டுப்பாடு - உச்சநீதிமன்றம் தடை

மெகுல் சோக்சி டொமினிகாவில் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவைப் பொறுத்து, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மீது இன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.

இதனிடையே, டொமினிகாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மியான்மரில் முடக்கப்பட்ட இணையதள சேவை வரிசையில் தற்போது டுவிட்டர் சேவையும் முடக்கம்:

naveen santhakumar

ஹிந்து மதத்தை இழிவு செய்யும் வகையில் புத்தகத்தில் இடம்பெற்ற கருத்து:

naveen santhakumar

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கிடைத்த எதிர்பாராத பாராட்டு….

naveen santhakumar