உலகம்

பசியால் வாடும் மக்களை ஆமைக்கறி சாப்பிட சொன்ன வடகொரிய அதிபர்! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ப்யோங்யாங்:-

பசியால் வாடும் மக்களை ஆமைக்கறி சாப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்.

கொரோனாவால் அண்டை நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டுள்ளதால் வடகொரியாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரிசி, சமையல் எண்ணெய், மாவு, இறைச்சி, பழங்கள் உள்ளிட்டவை வடகொரியாவிற்குள் செல்வது தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பசியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முன்னர் ரஷ்யாவில் ஒரு ரொட்டித் துண்டுக்காக நீண்ட வரிசையில் மக்கள் நின்றனர். இங்கே வட கொரிய மக்கள் நீண்ட காலமாகவே உணவு பொருட்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள்.

ALSO READ  டிசம்பர் மாதத்திற்கு பிறகு மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு !  

இந்நிலையில் வடகொரிய அரசு இணையதளமான நானரா(Naenara)ல் மக்கள் தங்கள் பசியை போக்கிக் கொள்ள டெர்ரபின் வகை ஆமைகளை உணவாக எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த திறப்பின் வகைகளில் அதிக அளவு புரதம் முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளது. இந்த வகை ஆமைகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் திறன் கொண்டது என்று நம்பப்படுகிறது. இந்த வகை ஆமைகள் அதிக ருசியை கொண்டவை. எனவே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் முக்கியமானதாக உள்ளது.

ALSO READ  கொரோனா மூன்றாவது அலையை தடுக்க இதை செய்தால் போதும்.. அரவிந்த் கெஜ்ரிவால் !

மேலும் வடகொரிய அரசு மருத்துவர்கள் ஒல்லியாகும் தேனீர் (Slimming Tea) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த தேநீரை பருகுவதன் மூலமாக 40 நாட்களில் 10 கிலோ வரை எடை குறையலாம் என்று கூறியுள்ளனர். மேலும் வட கொரியாவின் விஞ்ஞானிகள் ஒல்லியாகும் மாத்திரைகளையும் (Slimming Pills) கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியின் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் பக்தவச்சலத்திடம் இதுகுறித்து கேட்டபோது மக்களை எலிக்கறி சாப்பிடுங்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரானா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது – பிரிட்டன் அரசு அறிவிப்பு

News Editor

பாஸ்போர்ட்டை கடித்து குதறிய நாய்க்கு நன்றி தெரிவித்த பெண் !

Admin

நீங்கள் ஒன்னும் கவலைப்படாதீங்க டிரம்ப்….உங்களுக்கு நாங்க வேலை கொடுக்குறோம்….

naveen santhakumar