உலகம்

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியல்… முதல் நாடு எது ??இந்தியன் இடம் என்ன??

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி அல்லோகலப்பட்டு  வரும் இந்த நிலையில் உலகின் மிவும் மகிழ்ச்சிகரமான தேசமாக பின்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா இந்தப் பட்டியலில் 144 ஆவது இடத்தில் உள்ளது, மொத்தம் 156 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் டென்மார்க், மூன்றாவது இடத்தில் சுவிட்சர்லாந்து-ம் உள்ளது. யுனைடெட் கிங்டம்  இந்த பட்டியலில் 13வது இடத்திலும் அமெரிக்கா 18வது இடத்திலும் உள்ளது. கடைசி நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது.

ALSO READ  போக்சோ தீர்ப்பின் விளைவு; நிரந்தர நீதிபதி பதவியை பறிகொடுத்த புஷ்பா..!

உலகில் மகிழ்ச்சி தரமான நாடுகளுக்கான குறியீட்டின் படி மூன்றாவது முறையாக  பின்லாந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் உலக மகிழ்ச்சி குறியீட்டில் முதல் 10 இடங்களில் ஆதிக்கம் செய்து வந்த நிலையில் லக்சம்பர்க் உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதன் முறையாக முதல் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லக்ஸம்பர்க்.

பின்லாந்து உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்துவருவது அனைவரது புருவங்களை உயர்த்தியுள்ளது. 5.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பின்லாந்து அதிகளவு காடுகளும், ஆயிரக்கணக்கான ஏரிகளும் சூழ்ந்த ரம்மியமான பிரதேசம்.

ALSO READ  கொரோனா வைரஸை தடுக்க ஐடியா சொன்ன தலாய்லாமா

O.E.C.D நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின்லாந்து மக்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு, பொது சேவைகள், வெளிப்படைத்தன்மை, குறைந்த அளவு வறுமை, பாகுபாடுயின்மை என உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக திகழ்கிறது

இந்தப் பட்டியலில் கடைசி மூன்று இடங்களில் அமைதியின்மையை, உள்நாட்டுக் கலவரம், வறுமை மற்றும் நிலைத்தன்மையின்மை போன்ற காரணங்களால் ஜிம்பாப்வே,தெற்கு சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யார் இந்த சாமுவெல் மோர்ஸ்..???

naveen santhakumar

நள்ளிரவில் கோடிஸ்வரியான பெண்!!!

Admin

சீனா எல்லையை மூட வலியுறுத்தி ஹாங்காங் மருத்துவர்கள் ‘ஸ்டிரைக்’

Admin