இந்தியா உலகம்

ப.சிதம்பரத்தை ஊழல் அரசியல்வாதி என விமர்சித்த ”The Diplomat” பத்திரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா தொற்று உலகம் முழுக்கு பல சேதாரங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அமெரிக்காவில் கொரோனா தனது கோர தாண்டவத்தை ஆடியுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். 

கொரோனா வைரஸ் அதிகம் தாக்கியுள்ள நாடாக அமெரிக்கா திகழ்கிறது இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளனர் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவிற்கு மாற்றாக இந்தியாவை கருதி வருகிறது இதனால் இந்தியாவிற்கு நிறைய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது தி டிப்ளோமேட் பத்திரிக்கை.

இந்நிலையில் அதே பத்திரிக்கை ப.சிதம்பரத்தை ஆகச்சிறந்த இந்திய ஊழல் அரசியல்வாதி என்று வர்ணித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவின் அதிஉயர் கைது நடவடிக்கை என்பது இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் கைது நடவடிக்கையாகும் தற்பொழுது வழக்குகளை இரண்டு புலனாய்வு நிறுவனங்கள் விசாரித்து வருகின்றனர் அவற்றில் ஒன்று அமலாக்கத்துறை  (Enforcement Directorate) மற்றொரு அமைப்பு இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புலனாய்வு அமைப்பான CBI (Central Bureau of Investigation) ஆகும். 

இந்திய அரசியலில் உள்ள பல மர்மங்கள் தற்போது பா.சிதம்பரத்தின் வழக்குகளால் வெளியாகி கொண்டிருக்கிறது. 

காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் மத்தியில் காரசாரமான பூசல்கள் இருந்தாலும் இரு கட்சிகளுக்கும் மத்தியில் ஒரு நெருக்கமான பிணைப்புகள் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ALSO READ  ஹெலிகாப்டர் மூலம் விலங்குகளுக்கு உணவு வழங்கும் : ஆஸ்திரேலியா

மேலும் அந்த செய்தியில் கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும், ப.சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான அருண் ஜெட்லி நிதி அமைச்சராக பொருப்பேற்றார். அப்போது சிதம்பரம் மீதான ஊழல் குற்றசாட்டுகளுக்கு எந்த ஒரு பெரிய அளவிலான விசாரணை இல்லை. ஆனால் அருண் ஜெட்லி உடல்நிலை சரி இல்லாததால் நிதி அமைச்சர் பதவில் இருந்து விலகினார். அப்போது இருந்து ப.சிதம்பரத்திற்கு எதிராக பலரும் ஒன்று கூடியதாக கூறப்பட்டுள்ளது. 

அதிலும் அந்த செய்தியில் தற்செயலாக சிதம்பரம் ஆகஸ்ட் 21ல் கைது செய்யப்பட்டார், அவரது நெருங்கிய நண்பர் அருண் ஜெட்லி ஆகஸ்ட் 24ம் தேதி காலமானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் நான்கு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அவை இந்தியாவில் சட்டவிரோதமாக எப்படி பணம் செய்யப்பட்டது,

நாட்டை விட்டு எப்படி பணம் வெளியே கொண்டு செல்லப்பட்டது, 

வெளிநாட்டில் எப்படி பணம் பயன்படுத்தப்பட்டது, 

எப்படி பணம் இந்தியாவிற்குள் மீண்டும் கொண்டுவரப்பட்டது.

இது மிகப்பெரிய வலைப்பின்னலை கொண்டுள்ளது. இதில் பல அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் (Bureaucrats), வங்கி அதிகாரிகள்  கட்டுப்படுத்துபவர்கள், நிதி சேவை வழங்குபவர்கள், கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுபவர்கள் மற்றும் பலர் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சிதம்பரமும் அவரது ஆட்களும் தங்கள் பதவிகளை பயன்படுத்தி மக்கள், கொள்கைகள், ஒழுங்குமுறைகள், ஒழுங்குபடுத்துபவர்கள் ஆகியோர் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அதில் இருந்து பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியதாக “தி டிப்ளோமேட்” வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ALSO READ  சட்டமன்ற தேர்தலுக்கு தடை கேட்டு; உயர்நீதிமன்றத்தில் மனு..!

மேலும் சிதம்பரமும் அவரது ஆட்களும் எப்படி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பண பரிவர்தனை செய்யப்பட்டனர், அப்படி செய்யப்பட்ட பணங்கள் இந்தியாவிற்கு மீண்டும் எப்படி கொண்டு வரப்பட்டது என முழுமையாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிற்கு இந்த பணம் எவ்வாறு கொண்டுவரப்பட்டது ?

இந்தப்படம் பெரும்பாலும் ஹவாலா மூலமாக தான் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளின் வழியாக தான் இந்த பணம் ஹவாலா ஆக மாற்றப்பட்டு இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதை எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால்  டெல்லியில் உள்ள ஜோ லண்டனில் உள்ள தனது சகோதரன் ஜாக்-க்கு 50,000 டாலர்கள் அனுப்ப வேண்டியுள்ளது. ஜோ இதை டெல்லியில் உள்ள பாப்  என்ற ஹவாலா ப்ரோகரை தொடர்பு கொண்டு 50,000 டாலரை அவரிடம் கொடுக்கிறான். பாப் லண்டனில் உள்ள தனக்கு நெருக்கமான மற்றொரு ஹவாலாகாரரிடம் ஜாக்-க்கு தேவையான 50,000 டாலரை கொடுக்க சொல்கிறார் (இந்தப் பணம் சம்பந்தப்பட்ட நாட்டின் கரன்சி ஆக கொடுக்கப்படும்).  இதில் எந்த விதமான கஸ்டம்ஸ், வரி மற்றும் மேலும் எந்தவிதமான சோதனைகளும் இதில் இல்லை இவ்வாறாக தான் இந்தியாவிற்குள் இந்த பணம் ஹவாலா மூலமாக கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேரலையில் நிருபரை துரத்திய பன்றி – வைரலாகும் வீடியோ

Admin

பத்மஸ்ரீ விருது பெற்ற பொற்கோயிலின் முன்னாள் ‘ஹசூரி ராகி’ கொரோனா வைரஸால் மரணம்…..

naveen santhakumar

தலிபானுக்கு ஆதரவு -எம்.பி., மீது தேசதுரோக வழக்கு!

News Editor