உலகம்

மேலாடை காரணமாக விமானத்தில் ஏற பெண்ணுக்கு தடை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவில் சிறிய அளவிலான மேலாடை அணிந்த பெண்ணுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டென்வெரில் இருந்து நியூ ஜெர்சிக்கு செல்லும் விமானம் ஒன்றில் ஆண்ட்ரியா வேலட்வைட் என்ற பெண் பயணம் செய்ய விமான நிலையம் வந்தார்.

அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர், அவர் அளிந்திருந்த மேலாடை சிறியதாக இருப்பதாக கூறி விமானத்தில் ஏற அனுமதி மறுத்தார். இதனால் அவர்களிடம் வாக்குவாதம் செய்த ஆண்ட்ரியா பின் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்.

ALSO READ  ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்; மோடி வாழ்த்து !

இதுகுறித்து அவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட கருத்தில், மிகப்பெரிய பணியில் இருக்கும் எனக்கு நேர்ந்த இந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், தர்மசங்கடமான நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் தெரிவிக்கையில், வாடிக்கையாளர்களுக்கு திருப்தியான சேவையை அளிக்க வேண்டும் என்பதே தங்களின் கொள்கை எனவும், இச்சம்பவம் குறித்து ஆண்ட்ரியாவுடன் பேசியதாகவும் கூறியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூன்றாவது முறையாக அமெரிக்காவின் செனட் உறுப்பினராக தேர்வான தமிழகத்து தாரகை:

naveen santhakumar

தொடரும் தலிபான்கள் கொடுமை – ஆண்கள் தாடியை வெட்டக்கூடாது தாலிபான்கள் உத்தரவு

News Editor

2750km தொலைவிலுள்ள பொருளை தாக்கக்கூடிய வகையில் ஏவுகணை சோதனை நிகழ்த்தியது பாகிஸ்தான் :

naveen santhakumar