இந்தியா

மாதவிடாய் ஏற்பட்ட பள்ளி மாணவிக்கு உதவிய மாணவன்- தாய் பாராட்டு.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹரியானா:-

ஃபேஸ்புக்கில் குர்கான் மாம்ஸ் (Gurgaon Moms) என்ற ஃபேஸ்புக் க்ரூப்பில் பெண் ஒருவர் இட்ட பதிவு அதிகளவில் வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் அந்த பெண் கூறியதாவது:-

எனது மகள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு பள்ளி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது பீரியட்ஸ் ஏற்பட்டது.

இதை என் மகளை விட ஒரு வயது மூத்த மாணவன் ஒருவன், அவள் ஆடையில் ஏற்பட்டிருந்த இரத்த கறையை கண்டு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டதை அறிந்திருக்கிறான்.

உடனே, அந்த மாணவன் என் மகளின் காதருகே வந்து, உன் ஆடையின் பின்னால் இரத்த கறை ஏற்பட்டிருக்கிறது; நான் என் ஸ்வெட்டரை தருகிறேன் பேருந்தில் இருந்து இறங்கும் போது நீ அதை உன் இடுப்பில் கட்டிக் கொண்டு வீட்டுக்கு பத்திரமாக செல் என்று கூறி இருக்கிறான்.

ALSO READ  இனி கர்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு…!

முதலில் அதை கேட்டு என் மகள் சற்று தயங்கி இருக்கிறாள். அதனால், அதை மனதுக்குள் வைத்துக் கொண்டு பரவாயில்லை என்று அந்த மாணவனிடம் என் மகள் கூறியுள்ளார். அவளில் தயக்கத்தை உணர்ந்த அந்த மாணவனோ பதிலுக்கு, எனக்கு தங்கைகள் இருக்கிறார்கள். இதெல்லாம் நல்லது தான், நீ என் ஸ்வெட்டரை எடுத்து செல் என்று மேலும் கூறி என் மகளை பத்திரமாக பேருந்தில் இருந்து இறக்கிவிட்டிருக்கிறான்.

ALSO READ  ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர் சவுமித்ரா குமார் ஹல்தார் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமனம்

ஒருவேளை நீங்கள் அந்த மாணவனின் அம்மாவாக இருந்தால், உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மகனை நீங்கள் நல்லபடியாக வளர்த்துள்ளீர்கள் என பாராட்டியுள்ளார்.

மேலும், இந்தகால இளம் தலைமுறையை பற்றி கெட்ட செய்திகளே தற்போது அதிகம் நம் கேட்டு வருகிறோம். ஆனால், அவர்கள் நல்ல காரியங்களும் செய்கிறார்கள் என்பதை தெரியபடுத்த வேண்டும் என்பதற்கே இந்த பதிவு என்று, அந்த தாய் தன் பதிவினை முடித்துக் கொண்டிருக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கிய மத்திய அரசு…!

News Editor

ஊரடங்கு உத்தரவு: குடும்ப தகறாறு… கங்கையில் 5 குழந்தைகளை வீசி கொன்ற பெண்….

naveen santhakumar