உலகம் மருத்துவம்

எச்.ஐ.வி யை வென்ற உலகின் 2-வது நபர்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:-

உலகில் H.I.V.யால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது நபர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆதம் கேஸ்டில்ஜோ (Adam Castillejo (40)) முன்பு ‘லண்டன் பேஷன்ட்’ (London Patient) என அறியப்பட்டவர். தற்போது எவ்வித மருந்துகளும் இன்றி கடந்த 30 மாதங்களாக நலமுடன் வாழ்ந்துவருவதாக அமெரிக்க பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த நபருக்கு H.I.V. இருப்பது கடந்த 2003 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு 2012-ம் ஆண்டு புற்றுநோயும் இவருக்கு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்பது. இதற்காக நீண்ட காலம் மருந்து மாத்திரைகள் எடுத்து குணமடைந்த அவருக்கு கடந்த ஆண்டு கூடுதலாக எலும்பு மஜ்ஜை அறுவை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

திமோத்தி பிரவுன் (Timothy Brown aka Berry)
என்ற அமெரிக்க நபர் H.I.V.-ல் இருந்து முதன்முதலாக குணமான நபராக அறியப்படுபவர். இவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்றிர். கடந்த 2007 ல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நலமுடன் உள்ளார்.

ALSO READ  ‘ஓமிக்ரான்’ - உலகை அச்சுறுத்தும் அடுத்த கொரோனா திரிபு - உலக சுகாதார நிறுவனம்

இது குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக (University of Cambridge) மருத்துவ நிபுணர் ரவீந்திர குமார் குப்தா தெரிவித்தாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2017 முதல் மருந்துகளை எடுப்பதை நிறுத்திக்கொண்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவர் நலமாக உள்ளார். அதே சமயம் H.I.V. பாதித்த எல்லா நோயாளிகளுக்கும் இந்த எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பலன் தராது என்றும் தெரிவித்திருக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆஸ்திரேலியாவில் மானத்தை வாங்கிய இந்தியர்..என்ன பண்ணார் தெரியுமா?

Admin

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor

பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக தலைவர்களுக்கு நன்றி கடிதம் எழுதியுள்ள செந்தில் தொண்டமான்..

naveen santhakumar