இந்தியா

குழந்தைகளின் Online கல்விக்காக பசுவை விற்ற விவசாயி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஷிம்லா:-

ஹிமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது குழந்தையின் ஆன்லைன் வகுப்பிற்காக வருமானத்தின் ஆதாரமாய் இருந்த பசுவை விற்ற பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக உலகளவில் பெரும்பான்மையான குழந்தைகளின் கல்வி இடைநிற்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது குழந்தையின் ஆன்லைன் வகுப்பிற்காக தனது வருமானத்தின் ஒரே ஆதாரமாக இருந்த பசுவை விற்று குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கியுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. ஹிமாச்சலப் பிரதேசம் காங்க்ரா (Kangra) மாவட்டத்தின் ஜ்வாலமுகி (Jwalamukhi) தாலுக்கா கும்மர் (Gummer) கிராமத்தை சேர்ந்தவர் குல்தீப்குமார். 

குல்தீப்குமாரின் மகன் அனு மற்றும் மகன் வன்ஷ் ஆகியோர் அருகே உள்ள அரசு பள்ளியில் 4வது மற்றும் 2வது வகுப்புகள் படித்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் படிப்பைத் தொடர ஸ்மார்ட்போன் அவசியம் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

ALSO READ  கேரளாவை போன்று இமாச்சலிலும் கொடூரம்... கோதுமை உருண்டைக்குள் வெடிமருந்து; வாய் சிதைந்த பசு- ஒருவர் கைது..

மோசமான நிதி நிலைமை காரணமாக தனது இது அவரது ஒரே வருமான ஆதாரமாக இருந்த பசு மாட்டை ரூ .6,000 க்கு விற்று ஒரு ஸ்மார்ட்போனை வாங்கியுள்ளார்.

இதுதொடர்பாக குல்தீப், கூறுகையில்:-

தன்னிடம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள்(BPL)கான அட்டை கூட இல்லை என்று கூறுகிறார். நிதி உதவிக்காக பல முறை பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகியும் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை என்றார். 

ALSO READ  ஹிமாச்சல பா.ஜ.க. எம்.எல்.ஏ மறைவு…! 

இதனிடையே, ஜ்வாலமுகி எம்.எல்.ஏ ரமேஷ் தவாலா, குல்தீப் குமாரின் குடும்பத்திற்கு விரைவாக நிதி உதவி வழங்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் BDO மற்றும் சப் டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் (SDM)க்கு உத்தரவிட்டுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தி ஆலைகளை மூட முடிவு..!

Admin

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

naveen santhakumar

மருத்துவர்களின் அலட்சியம்; குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்திற்கு பதில் சானிடைசர்..!

News Editor