உலகம்

புபோனிக் பிளேக் மரணம் சீனாவில் கிராமம் சீல் வைப்பு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பீஜிங்:-

புபோனிக் மரணம் காரணமாக சீனாவில் கிராமம் ஒன்று முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உள் மங்கோலிய பிராந்தியத்தில் (Inner Mongoloa Region) உள்ள சுஜி ஸின்கன் (Suji Xincun) எனும் பகுதியில் புபோனிக் பிளேக் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதனால் அந்த கிராமம் முழுவதும் சுகாதார துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த 9 பேர் மற்றும் அருகிலுள்ள 26 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ப்ளேக் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளது. எனினும் பாதுகாப்பு கருதி சுகாதார துறை அதிகாரிகளால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

சுஜி ஸின்கன் கிராமம் அமைந்துள்ள டாமோ பேனர் (Damao Banner) மாவட்டத்திற்கு மூன்றாம் கட்ட பிளேட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ALSO READ  சீனாவை காக்க போதிதர்மன் வருகிறாரா?- நம்பிக்கையுடன் காத்திருக்கும் மக்கள்

இதற்கு முன்னர் உள் மங்கோலியாவின் பையானூர் (Byannur) பகுதியில் நபர் ஒருவருக்கு ப்ளேக் தொற்று கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது சுஜி ஸின்கன் பகுதியில் தற்போது உயிரிழந்த நபருக்கு ப்ளேக் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருப்பு மரணம் (Black Death) என்று ஐரோப்பியர்களால் அழைக்கப்படும் இந்த புபோனிக் பிளேக் நோய் மத்திய காலகட்டத்தில் ஐரோப்பாவில் ஐந்து கோடிக்கும் அதிகமான மக்களை கொன்றுள்ளது. பிளேக் நோயானது பாக்டீரியா மூலமாக பரவுகிறது.  பொதுவாகவே நோயானது கொறிக்கும் பிராணிகளான அணில்கள், எலிகள் மூலம் பரவக்கூடியது. பெரும்பாலும் எலிகள் மூலமாக பரவுகிறது.

ALSO READ  மகாத்மா காந்தி கவுரவிக்கும் வகையில் நாணயம் வெளியிடும் இங்கிலாந்து… 

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி வருடம் தோறும் 1000 முதல் 2000 மக்கள் பிளேக் நோய் தொற்றால் உயிரிழக்கின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் சீனாவில் மொத்தம் 31 புபோனிக் பிளேக் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 12 பேர் உயிரிழந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸி ஜிங்பிங்-ஐ பாராட்டிய டொனால்ட் ட்ரம்ப்.

naveen santhakumar

முதியோர் இல்லங்களில் 7500 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல்…

naveen santhakumar

பிரேசிலை மிரட்டும் கொரோனா; ஒரே நாளில் 3 ஆயிரத்தை கடந்த உயிர்பலி !

News Editor