தமிழகம்

காலவரையற்ற வேலைநிறுத்தம்; லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் பெட்ரோல்–டீசல் விலையோடு, கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மூன்று முறை கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வைக் கண்டித்து, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களில் விலை ஏறும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

ALSO READ  சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன் !

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியர்களை சந்தித்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் தன்ராஜ் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாஸ்டேக் முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் சுங்கச்சாவடிகளில் பல மணி நேரம் லாரிகள் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. வரும் 15ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் காரணமாக மே 2ம் தேதிக்கு மேல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் எனவும் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறக்கப்படலாம்;  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பேட்டி..!

News Editor

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் தீவிபத்து…!

naveen santhakumar

அதிர்ச்சி……அமைச்சர் துரைக்கண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்….

naveen santhakumar