தமிழகம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ளநிலையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தற்போது தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டும் தான் வரவேண்டும், இரண்டு கார்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். மேலும் வேட்புமனுக்களை ஆன்லையனில் தாக்கல் செய்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தி கொள்ளும் வசதியும் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யப்படமாட்டாது. வேட்புமனுக்களை அந்தந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும் பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பொது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும், தனி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் தொகையாக 5 ஆயிரம் செலுத்தவேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ALSO READ  அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் 19 ஆம் தேதி கடைசி நாள் என்றும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.  வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 22ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு நீட்டிப்பு ..50,100,200 ரூபாய் தொகுப்புகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்  ! 

News Editor

தமிழகத்துக்கு ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar

தமிழக அரசு பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்..!!

naveen santhakumar