தமிழகம்

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் ; சென்னை காவல் ஆணையர் வேண்டுகோள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா ஆர்ச் அருகில் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சைக்கிள் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் துவக்கி வைத்தார்.

மேலும், அங்கு கூடியிருந்த பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், போக்குவரத்து காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு கபசுரக் குடிநீரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு பாடல் ஒன்றும் பாடப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், மாநகரில் தினமும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், முகக்கவசம் அணிதலையும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றார். 

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; தடை செய்யப்பட்ட பகுதியாக மாறும் தேனி மாவட்டம் ! 


மேலும்  பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் மூலம் 70% க்கு மேல் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க இயலும் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- காவல் ஆணையர் எச்சரிக்கை:

naveen santhakumar

கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் !

News Editor

நாளை திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா!

Shanthi