தமிழகம்

கொரோனா நோயாளிகளின் உணவு தேவைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனோவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது அதில் ஒன்றாக கடந்த 10ந்தேதி  முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நெல்லை சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்தார். அப்போது மாவட்டத்தில் கொரோணா தோற்றின் தாக்கம் மற்றும் மருத்துவமனை நிலை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இன்றைக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோணா தோற்று எப்படி உள்ளது என்ன செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கலந்துரையாடினேன்.

ALSO READ  3 ஆம் அலை 13 பேர் கொண்ட பணி குழு - அரசாணை வெளியீடு

அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் வரக்கூடிய நோயாளிகளை காத்திருக்க வைக்காமல் பேருந்துகள் மூலம் அதில் சிலிண்டரை வைத்து அவர்களுக்கு பெட் கிடைக்கிற வரையில் பேருந்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். 

கொரோணா தொற்றில் மீண்டு வீடு திரும்புவர்களை ஒரு வார காலம் பள்ளி கல்லூரிகளில் வைத்து தனிமையில் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வீட்டுக்கு சென்றால் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.

ALSO READ  வீட்டில் தனிமைப்படுத்துவது ரத்தா? ஆணையர் பிரகாஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் முரண்பட்ட தகவல்.. 

அதனால் முழுமையாக குணமடையும் வரை பள்ளிகளில் வைத்து ஒரு வார காலமாக நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஏற்படும் உணவு தேவைகளை நாங்களே செய்து தருகிறோம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளோம் என்றார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

IRCTC இணையதளத்தில் ரயில் முன்பதிவு இறுதி நிலவரம் அறியலாம்: புதிய வசதி அறிமுகம்

Admin

மே 1,2 தேதிகளில் முழு பொது முடக்கம்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் !

News Editor

இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் சாலை விபத்தில் காயமடைந்தோருக்கு முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

News Editor