தமிழகம்

ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஈரோடு

ஆடி மாதம் முடிந்து ஆவணி வந்தா டாப்புல போவோம் அப்புடின்னு சினிமாவுல வசனம் வரும். அதுபோல அதிருஷ்டம் லரோடு மாவட்டம் பவானி காவல் எல்லையில் உள்ள காவல் நிலையங்களுக்குக் கிடைத்தது.

ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமண ஜோடிகளால் கோவில்கள் நிரம்பி வழிந்தன. கூட்டம் அதிகமானதால் கோவில்களின் உள்ளே அனுமதிக்காததால் பல திருமண ஜோடிகள் கோவில் நுழைவு வாசலில் நின்று திருமணம் செய்து கொண்டனர்.

ALSO READ  2022 மே மாதம் பொதுத் தேர்வை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு ?
Special Marriage Act and anti-conversion Ordinance: Cause and effect  relationship

ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையம், அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர் .

ஒரே நேரத்தில் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 7 காதல் ஜோடிகளும், அந்தியூர் காவல் நிலையத்தில் 3 காதல் ஜோடிகளும், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் 2 காதல் ஜோடிகளும் அடுத்தடுத்து பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

ALSO READ  நீலகிரி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

இதனால் காலை முதல் மாலை வரை பவானி அனைத்து மகளிர் காவல் நிலையம் காதல் ஜோடிகளின் பெற்றோர்களை அழைத்து பேசி சமாதானம் செய்வதிலேயே படு பிசியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவா இருந்தாலும் சரி…சொரோனாவா இருந்தாலும் சரி…எங்களுக்கு ஆஃபர் தான் முக்கியம்:

naveen santhakumar

பெட்ரோல் விலை குறைப்பு…நாளை முதல் அமலுக்கு வருகிறது…..

Shobika

விதிமுறைகளை மீறிய உணவகங்கள்; சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்கள்

News Editor