சினிமா

நடிகை வாணி போஜன்- ஆல் தொல்லைக்கு ஆளான ரியல் எஸ்டேட் அதிபர்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சன் டிவியின் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

கடந்த ஆண்டு ‘மீக்கு மாத்திரமே செப்தா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

சமீபத்தில் அசோக் செல்வன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பூபாலன் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் நான் எனது செல்போன் எண்ணை கடந்த 20 ஆண்டுகளாக உபயோகித்து வருகிறேன். சமீபகாலமாக இந்த எண்ணிற்கு ஏராளமான ராங் கால்கள் வருகிறது அனைவரும் நடிகை வாணி போஜனை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள் சிலர் அத்துமீறி பேசுகிறார்கள் என்றார்.

அதாவது, சமீபத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படத்தில் வாணி போஜன் தனது நம்பர் என்று ஒரு நம்பரை படத்தின் ஹீரோ அசோக் செல்வனுக்கு தருவார்.

ALSO READ  அஜித் பட நடிகைக்கு கொரோனா தொற்று ! 

அந்த நம்பர் தான் இந்த பூபாலனின் நம்பர். இதை கண்ட பலரும் பூபாலனுக்கு போன் செய்து தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து சம்பந்தப்பட்ட படக்குழு மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கீர்த்தி சுரேசுக்கு பிடித்த நடிகர் யார் ???

naveen santhakumar

அருண் விஜய்யின் புத்தாண்டு பரிசு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !  

News Editor

“ஜகமே தந்திரம்” படத்தின் அப்டேட்டை அறிவித்த படக்குழு…!

News Editor