சினிமா

சாட்  வித் “செல்லப்பிள்ளை” அருண் சந்திரன்!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது நினைவு தினத்தை போற்றும் விதமாக, “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட அழகான மோஷன் டீஸர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் அருண் சந்திரன் பகிர்ந்து கொண்டதாவது:-

“செல்லப்பிள்ளை”- என்ன மாதிரியான பின்னணி கொண்ட கதை?

ஒன் லைன்-ல சொல்லணும்னா  மோஷன் டீஸர்ல “மதுரை அப்பத்தா” சிங்கப்பூர்-ல இருக்க போர் கல்வெட்டுகளை கும்பிடுற மாதிரி இருக்கும், அப்பத்தாவுக்கும் கல்வெட்டுக்கும் என்ன பந்தம். குறிப்பாக, தமிழர்களுக்கும், நேதாஜிக்கும் இடையேயான அசைக்க முடியாத உறவு குறித்து பதிவு செய்துள்ளோம்.

நம் தேசத்தின் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர்களின் 125 வது நினைவு தினத்தை போற்றும் விதமாகவும், அவருக்கான அர்பணிப்பாகவும், இந்த மோஷன் டீஸரை உருவாக்கினோம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நம் தேசத்தின் தந்தை. அவரின் தியாகத்தையும், வீரத்தையும் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.

நேதாஜி அழைப்பை ஏற்று ஏராளமான இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் இந்திய விடுதலைக்காக INA ல சேர்ந்து உயிர் விட்டாங்க, இதில பலபேரோட பெயரே தெரியாது. அவங்க நினைவாகவும், அவர்களை கவுரவிக்கவும் 1942ல் நேதாஜி இந்த கல்வெட்டுகளை நிறுவினார்.

அதனையடுத்து பிரிட்டிஷ் அரசாங்கம் அதை இடித்தது, அதன் பின்னர் சிங்கப்பூர் அரசு மறுசீரமைத்தனர். இதில் ஜப்பான், ஆங்கிலம், சிங்கப்பூர் மற்றும் தமிழ் மொழியில் கல்வெட்டு அமைந்துள்ளது. இதில் ஹிந்தி இல்லாமல் தமிழில் இருப்பது  நம் அனைவருக்கும் பெருமை. 

ALSO READ  இரும்புத்திரை இயக்குநருடன் கைகோர்க்கும் கார்த்தி !

“தேவர் மகன்” சிவாஜி கணேசன் டயலாக் ? வீச்சருவாள் 

“தேவர் மகன்” படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நேதாஜி குறித்து பேசிய “ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போருக்கு கூப்பிட்ட போ, வீச்சருவாளும் வேல்கம்புமா… கெளம்புன பயலுக நம்ம பயலுகதேன்” எனும் வசனம் என்னை ரொம்பவே பாதித்தது. என்னோட மனதில் ஆழமாக பதிந்தது. ஏன் இந்த டயலாக், கமல் சார் இந்த டயலாக் வைக்க காரணம் என்னனு தோணிட்டே இருந்துச்சு. அந்த தேடலில் தான் நேதாஜி பற்றி தெரிய வந்தது.

நம்ம பாடபுத்தகத்தில் நேதாஜி பற்றி அவ்வளவு இல்லை, அது தான் இன்றைய தலைமுறை கிட்ட நேதாஜியை கொண்டு சேர்க்கணும் என்பது தான் என்னோட முயற்சி. இது நம்ம வரலாறுன்னு இன்றைய தலைமுறைக்கு தெரியணும்.

இந்த படத்துக்கு எப்படி கவுதம் கார்த்திக்கை  தேர்ந்தெடுக்கிறீர்கள் ?

நான் முன்னரே இந்த படத்துக்கு கவுதம் தான்னு முடிவு பண்ணிட்டேன். “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்துல கவுதம் கார்த்திக்கின் எனர்ஜி வேற லெவல்ல இருக்குன்னு தெரிஞ்சிது. கார்த்திக் சாரிடம் இருக்கும் தனித்தன்மை கவுதம் DNA வில்  அப்டியே இருக்கு. தன்னோட டைம்ல கார்த்திக் எப்படி பெரிய ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்தாரோ அதே மாதிரி கவுதம் இருப்பார்.

தவிர முத்துராமன் சார், கார்த்திக் சார் இப்போ 3வது தலைமுறையாக வர கவுதமிடம் ரசிகர்கள் நிறைய எதிர்ப்பாங்க அதை நிச்சயம் கவுதம் பூர்த்தி செய்வார். நிச்சயம் ரசிகர்களோட செல்லப்பிள்ளையாக வருவார்.

மோஷன் டீஸர் பார்த்துட்டு உங்களுக்கு வந்த பாராட்டுக்கள்:-

நிறைய பேர் பாராட்டுனாங்க,  டீஸர் பாத்துட்டு ஒரு ஒரு Goosebumps ஃபீல் பண்ணாத சொன்னாங்க. விஜய் சேதுபதி சாரிடம் தான் முதலில் காட்டினேன். ரொம்ப நல்லா இருக்கு, உன்கிட்ட இருந்து இதை எதிர் பார்க்கலன்னு  சொன்னார், அவரே ரிலீசும் செய்தார்.

ALSO READ  விஜய் கொடுத்த வாய்ப்பை வீணடித்த பிரபல இயக்குநர்

இசையமைப்பாளர் திஷன்:- 

இது நேட்டிவிட்டி சப்ஜெக்ட், அதனால் நேட்டிவிட்டி மியூசிக் தான் பண்ணிருக்கோம். திஷன்  சிட்டி ஃபேஸ் நபரானாலும்  படத்துக்கு நிச்சயம் வேறு ஒரு கலர் கொடுப்பர்.

நீங்க இதுக்கு முன்னாடி வேலை பார்த்தது:-

பொன்ராம் கிட்ட தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களில் வேலை பார்த்தேன். ரஜினி முருகன் முடிஞ்சதும் வெளியில் வந்துட்டேன்.

செல்லப்பிள்ளை படம் எப்போது  தொடங்கும் ? 

இப்படத்தின், பிற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளோம். மதுரை, தேனி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றார்.

உங்கள் எண்ணமும் செயலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அருண் சந்திரன் !

மறைந்த நடிகர் விவேக் சார் பற்றி ?

மிகப்பெரிய பேரிழப்பு. என்னோட அடுத்த கதை விவேக் சாருக்காக முழுக்க முழுக்க எழுதினேன். அவர் இப்போ இல்லையின்னு நினைக்கிறப்போ அந்த எழுத்த  பாக்கவே முடியல. அவர் நட்ட மரம் உள்ள வரை அவர் புகழ் நிலைத்திருக்கும்.

#Gauthamkarthik #Tamilcinema #cinemaupdate #cineupdate #TamilThisai #Chellapillai #Arunchandhiran #kollywood


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் சிம்பு  படத்திற்கு தமன் கொடுத்த அப்டேட்..!

News Editor

மாபெரும் வெற்றி பெற்ற இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி !

News Editor

மாரி செல்வராஜ், பா ரஞ்சித் மற்றும் த்ருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தினை உறுதி செய்தது படக்குழு !

News Editor