சினிமா

மீண்டும் பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் கிஷோர்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் வெற்றிமாறன் அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூரியை  கதாநாயகனாக வைத்து தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கயுள்ளார். இதில் எழுத்தாளர் ஜெயமோகனின் “துணைவன்” என்ற சிறுகதை  மையமாக வைத்தது உருவாகவுள்ளதாகவும் படத்தினை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். அதனையடுத்து இப்படத்தினை சத்தியமங்கலம் வனப்பகுதியில் படமாக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ALSO READ  உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் எலான் மாஸ்க்..!

 
படத்தின் முதல் கட்ட பணிகள் அணைத்தும் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளதால் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என படக்குழு தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. இன்நிலையிதான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள இயக்குநர் பாரதிராஜா படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குளிர்காலம் துவங்கியுள்ளதால் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஆடுகளம் வடசென்னை போன்ற படங்களில் நடித்த கிஷோர்  நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

ALSO READ  ரஜினியின் முடிவு குறித்து இயக்குனர் லிங்குசாமி கருத்து..!


இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தின் மூலம் நடிகர் கிஷோரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி:

naveen santhakumar

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு – த்ரிஷா நடித்துள்ள ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம்…

naveen santhakumar

துப்பறிவாளராக மாறிய நடிகை கஸ்தூரி:

naveen santhakumar