சினிமா

இப்படிப்பட்ட கணவன் தான் எனக்கு வேண்டும்: நிவேதா தாமஸ்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நிவேதா தாமஸ் (2 அக்டோபர் 1995 )இந்திய நடிகை ஆவார்.இவர் தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகின்றார்.

குழந்தை நட்சத்திரமாக பல திரைப் படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த நிவேதா தாமஸ் 2003 ஆம் ஆண்டு “உத்தரா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பிறகு 2008 ஆம் ஆண்டு “வெருதே ஒரு பார்யா” திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகாவின் மகளாக நடித்தார்.மேலும் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதினை வாங்கினார்.

ALSO READ  சீரியலிலிருந்து விலகிய பிரபல நடிகை- அவருக்கு பதில் யார் ???

அதனை தொடர்ந்து, அதே ஆண்டில் “குருவி” திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். பிறகு 2009 ஆம் ஆண்டு “அரசி” என்ற தொடரில் ராதிகாவின் மகளாக நடித்ததன் மூலம் பிரபல நடிகையானார்.

இவர் நடித்த “மை டியர் பூதம்” என்ற சின்னத்திரை தொடர் இவருக்கு குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.

 நிவேதா தாமஸ் தனது திரைப்படங்களின் மூலம் பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் அவரது வருங்கால கணவர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ALSO READ  வலது கண்ணில் கட்டுடன் காட்சியளித்த நடிகை குஷ்பு:

அதற்கு “அவர் என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும். என்னிடம் ஒன்று, மற்றவர்களிடம் ஒன்று, என்று மாற்றி மாற்றி கூறக்கூடாது, அப்படிப்பட்ட மனிதர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. மேலும் என் கணவர் பொறுப்புள்ள மனிதனாக இருக்க வேண்டும். நிறைய ட்ராவல் செய்வதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் இன்னும் பெஸ்ட்” என்று நிவேதா தாமஸ் பதிலளித்துள்ளார்.

இந்த கண்டிஷனுக்கு எல்லாம் ஓகே என்றால், நீங்களும் நிவேதா தாமஸுக்கு ஒரு அப்ளிகேஷன் போட்டு வைக்கலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கும் கட்சிக்கு செல்ல தயார்; நடிகர் சந்தானம் !

News Editor

நடிகை “நயன்தாராவை” காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு 

News Editor

அடடே சொல்லவைக்கும் அரவிந்த் சாமி நியூ லுக்

Admin