சினிமா

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். வித்தியாசமான கதைகளை இயக்கியதால் சினிமாத்துறையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது “சாணிக் காயிதம்” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இவர் இப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  உணவில் கரப்பான் பூச்சு....நிவேதா பெத்துராஜ் காட்டம்....

“சாணிக் காயிதம்” படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இதில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தில், செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இத்தகவலை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புதிய பயணத்தை தொடங்கியுள்ளோம், உங்கள் ஆசீர்வாதம் தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  டெல்லி முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்த டாக்டர் சேதுராமன் காலமானார்…..

naveen santhakumar

மாறுபட்ட கோணத்தில் களமிறங்க போகும் சிம்பு :

Shobika

அனிச்சமலர் அழகே…நடிகை ராஷ்மிகா மந்தனா..

Admin