தமிழகம்

மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்; பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தொழிலாளர் நல ஆணையம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை,  ஓய்வூதியதாரர்களுக்குப் பணபலன்,  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கக் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ALSO READ  தொடங்கியது காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!

ஊழியர்களின் போராட்டத்தால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறைந்த அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள், அலுவலகம் செல்வோர், வெளிமாவட்டங்களுக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் பல பேருந்து நிலையங்கள் வெறிசோடி காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று பிற்பகலில் சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் நல ஆணைய வளாகத்தில், ஆணையர் லக்ஷ்மிகாந்த் தலைமையில் தொழிலாளர் நலச்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தந்தை மரணம் – ஹெலிகாப்டரில் பறந்து வந்த பாசமகன்

naveen santhakumar

பாரிஸ் கார்னரில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு இலவச குடை..!

naveen santhakumar

நடப்பு கல்வியாண்டில் சென்னையில் கபாலீஸ்வரர் பெயரில் புதிய கல்லூரி – அமைச்சர் சேகர்பாபு !

naveen santhakumar