சினிமா

‘தளபதி 67’ இசையமைப்பாளர் இவரா?… இணையத்தை கலக்கும் புகைப்படம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா, தளபதி விஜய்யை சந்தித்திருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படப்பிடிப்பை விஜய் சமீபத்தில் நிறைவு செய்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்திருக்கிறார். இந்தப்படம் அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து விஜய் தனது அடுத்த படத்தை, தெலுங்கில் முன்னணி இயக்குநராக இருக்கும் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். ‘தளபதி 66’ என்றழைக்கப்படும் இந்தப் படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

ALSO READ  மாஸ்டர் போஸ்டரை கலாய்த்து மீம்ஸ்

இந்நிலையில் விஜய்- யுவன் ஷங்கர் ராஜா திடீர் சந்திப்பு குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘புதிய கீதை’ படத்தைத் தவிர இதுவரை யுவன் பணியாற்றவில்லை. ஏ.ஆர் ரஹ்மான், அனிருத் என பலருடன் ரிப்பீட் மோடில் விஜய் பணியாற்றினாலும் யுவன் ஷங்கர் ராஜா – விஜய் கூட்டணியை யுவன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இடையில் யுவன் – அஜித் கூட்டணியில் ‘தீனா’, ‘பில்லா’, ‘பில்லா 2’, ‘ஏகன்’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ என பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ALSO READ  விஜயகாந்த் படத்தை இயக்கிய இயக்குநர் ஏவிஎம் அருகே இறந்து கிடந்த சோகம்....

இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடன் உற்சாகமுடன் இருக்கும் புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்திருகிறார். ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வைரலாகிக்கொண்டு வருகிறது இந்தப் புகைப்படம். அதேசமயம், விஜய்யின் ‘விஜய் 66’ அல்லது ‘விஜய் 67’ படத்தில் யுவன் பணியாற்றுகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல இயக்குநருக்கு கொரோனா; தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை !

News Editor

5 மொழிகளில் தயாராகும் படம் – சீதா கதாபாத்திரத்தில் கங்கனா

News Editor

“பறக்கும் ராசாளியே”- நடிகை பூஜா ஹெக்டே புகைப்படங்கள்

Admin