சினிமா

காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த ‘வலிமை’ படக்குழு  !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அஜித் இயக்குநர் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேய வில்லனாக நடிக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். 

கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதி சண்டை காட்சியை படமாக்குவதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு செல்லவுள்ளது  திட்டமிட்டிருந்தது படக்குழு. மேலும் அந்நாட்டு அரசிடம் அனுமதிக்காக காத்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம். அதனால் எஞ்சியுள்ள படப்பிடிப்பை இந்தியாவில் படமாக்க  திட்டமிட்டு வருகிறது படக்குழு. 

இதனிடையே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில்  தற்போது அதில் மாற்றம் செய்துள்ளது படக்குழு. இது தொடர்பாக வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதனால் பலர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர்களை இழந்து, கொரோனா பீதியில் மக்கள் ஆழ்ந்து இருக்கின்றனர்.

ALSO READ  கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்; 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியிட தயாரான படக்குழு ! 

இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை மற்றொரு தேதிக்கு   தள்ளி வைக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். இதனால் சோகமடைந்த ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை மாளவிகா மோஹனன்

naveen santhakumar

மீண்டும் தனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ் !

News Editor

‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்ற விஜய்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor