தமிழகம்

கூட்டம் கூட்டமாக குவியும் மக்கள்; காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Covid-19 இரண்டாம் மலையை சமாளிப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது அதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வணிகம் சார்ந்த இறைச்சி மீன் காய்கறி மற்றும் பல்பொருள் அங்காடிகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமையான  இன்று நாளைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்குவதற்காக மக்கள் இன்று கூட்டம் கூட்டமாக மீன் மார்க்கெட்டில் காய்கறி கடைகளிலும் குவிந்து வருகின்றனர்.

ALSO READ  அரியலூர் வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ஜவஹர் !

இந்த நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் காலை 4 மணி முதலே பொதுமக்கள் மீன் வாங்குவதற்கு குவிய தொடங்கியுள்ளனர் மேலும் அங்கு வருவோருக்கு சானிடைசர் மற்றும் முகக்கவசங்கள் கட்டாயமான நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் சமூக இடைவெளி இன்றி மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதால் நோய்த் தொற்று எளிதாக பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் பொதுமக்கள் நோய்களின் தாக்கத்தை கருத்தில் கொள்ளாமல் அச்சமின்றி இவ்வாறு கூட்டம் கூட்டமாக பல மணி நேரங்களில் கூடுவது நமக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மக்கள் உணராமல் இருப்பது இதுவே சான்றாக விளங்குகிறது. என்னதான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த கடினமான சூழ்நிலையில் இருந்து நம்மால் மீண்டு வர முடியும் என்பதை நிச்சயமாக உணர வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இவர் கொடுத்திருக்கும் 500 ரூபாய் 5000 கோடிக்கு மேல் மதிப்பு வாய்ந்தது… கொரோனா தடுப்பு நிவாரண நிதி வழங்கிய பழங்குடி இளைஞர்….

naveen santhakumar

பஞ்சாப் தீவிரவாதி கைது!

Shanthi

சிறை மரணம்: சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் நல்லடக்கம்…

naveen santhakumar