இந்தியா

ஒரே நாளில் 2.5 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

சீனாவில்  தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது. 

ALSO READ  வீடு புகுந்து குழந்தையை தூக்கிச்சென்ற சிறுத்தை...

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 1,761 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வருக்கு கொரோனாவா???… 

naveen santhakumar

வாடகைத் தாய் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்……

naveen santhakumar

வீட்டின் மேற்கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்த மான்- வைரலாகும் வீடியோ…

naveen santhakumar