இந்தியா

கட்டுக்குள் வராத கொரோனா- மீண்டும் 2 வாரங்களுக்கு ‘முழு ஊரடங்கு’

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராமல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திகழ்கிறது.

கேரளாவில், அண்மைகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கிருந்து அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.

ALSO READ  பிரேசிலை மிரட்டும் கொரோனா; ஒரே நாளில் 3 ஆயிரத்தை கடந்த உயிர்பலி !

இந்தியாவில் முதன் முதலாக கொரோனா தொற்று கேரளாவில்தான் கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில்தான் அதிக கொரொனா பாதிப்பு காணப்படுகிறது. சராசரியாக 30 ஆயிரம் பேர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர சில அறிவுறுத்தல்களை வழங்கிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கேரளாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ALSO READ  நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி !

அவர்கள் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாததால் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வராமல் உள்ளது. எனவே, அதில் கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு மீண்டும் 2 வாரங்கள் ஊரடங்கை அமுல்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லி கலவரத்தின்போது பொதுமக்கள் கலவர கும்பலிடம் இருந்து காப்பாற்றிய ‘ஹீரோ போலீஸ்’.

naveen santhakumar

66வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா:மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான விருது

Admin

முதல் வகுப்பு படிக்கும் ராணா சர்வதேச மாடலிங் போட்டிக்கு தேர்வு

News Editor