இந்தியா

நான்கு நாட்களில் 4 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

சீனாவில்  தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது இரண்டாவது அலையை தொடங்கிவிட்டது.

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில்  1,26,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 685 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

#corona #Coronapositive #Covid!9 #NewCoronaVirus #TamilThisai #Covaccine #Centralgovt #coronadeath #CoronaFightIndia #HealthMinistery #CoronaUpdate #COVID19PostiveCases #CoronaPatients

Related posts

கழுத்தளவு தண்ணீரிலும் கடமையை செய்த போலீசார்…

naveen santhakumar

கொலையும் பண்ணிட்டு… போலீசுக்கு போன் செய்த நபர்…

Admin

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் !

News Editor