இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையில் அழியாத மை – மராட்டிய அரசு முடிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகளவு பாதிப்பு உள்ள மாநிலமாக மராட்டியம் உள்ளது. இந்த நிலையில் கண்காணிப்பில் இருந்த 7 பேர் கடந்த இரண்டு நாட்களில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  இடது கையில் அழியாத மையில் முத்திரையாகக் (Stamp) குத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியுள்ளார்.

இதையடுத்து, மும்பை மாநகர ஆணையர் பிரவீன் பர்தேசி  பிறப்பித்த உத்தரவில்:-

ALSO READ  சீன அதிபர் ஸி ஜின்பிங் மீது பிகார் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு..

மருத்துவமனைகள் மற்றம் விமான நிலையங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்களின் இடது கையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்றும், எத்தனை நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டியவர்கள் என்ற தேதியையும் அழியாத மையில் முத்திரையாகக் (Stamp) குத்துமாறு கூறியுள்ளார்.

இதன் மூலம், பொதுஇடங்களில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் பொதுமக்களே அடையாளம் காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ  ஒரே நாளில் 53 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

தனிமையில் இருக்க வேண்டியவர்கள், பொதுஇடங்களுக்கு வருவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அபராதம் மேல் அபராதம்.. விரக்தியில் பைக்கை எரித்த வியாபாரி!

naveen santhakumar

பெண்களின் திருமண வயதை உயர்த்தியது ஏன்?… மோடி விளக்கம்!

naveen santhakumar

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியான செய்தி:

naveen santhakumar