இந்தியா

பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் ஆக்சிஜன் ஆலை நிறுவப்படும் ; பிரதமர் மோடி பேச்சு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 வைத்து அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 9 மாநிலங்களில்  கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து தொற்று அதிகம் உள்ள 9 மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ், சென்னை மாநகர ஆணையர் ககன் சிங் பேடி  உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும். மாவட்டங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்தப் பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும்.

ALSO READ  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கிறது Modi Kitchen

ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஆக்சிஜன் ஆலை நிறுவும் பணி பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் நடக்கிறது. ஏற்கனவே, பல மருத்துவமனைகளில் பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் ஆக்சிஜன் ஆலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன” எனத் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி !

News Editor

மார்ச் 29-ம் தேதி வரை சர்வதேச விமானங்கள் இந்தியாவுக்குள் வரத் தடை

naveen santhakumar

21 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்பு:

naveen santhakumar